உங்க வீட்ல துளசி செடி இருக்கா? தவறியும் இதை மட்டும் செய்ய வேண்டாம்
இந்துக்களின் வீட்டில் வழிபாட்டிற்கு ஏற்ற புனிதமாக துளசி செடியை வழிபடுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்றும், துளசி செடிக்கு சில பொருட்களை வைத்து அர்ச்சனை செய்தால் செல்வமும் அதிர்ஷ்டமும் பெருகும் என்று ஜோதிட ரீதியாக நம்பப்படுகின்றது.
அந்த வகையில் துளசி செடியை வீட்டில் வைத்து வழிபடும் பொழுது நாம் தப்பியும் சில தவறுகளை செய்யக்கூடாது ஆகாவே நாம் செய்ய கூடாத தவறுகள் என்வென்று நாம் இங்கு பார்ப்போம்.
இந்து மதத்தில் துளசி செடிக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இது லட்சுமி தேவியின் சின்னமாக கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, உங்கள் வீட்டில் ஒரு துளசி செடி மகிழ்ச்சியையும், செழிப்பையும் அதிகரிக்கும். அத்துடன் பல பிரச்சனைகள் நீங்கும். இது பல ஆன்மீக மற்றும் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. அதன் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க நாம் பல விதிகளை பின்பற்ற வேண்டும்.
துளசி செடியை வீடுகளில் வைத்து வழிபடுவதும், துளசி இலைகளை பிரசாதமாக வழங்குவதும் பூஜையில் முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கியமாக துளசி செடியை சரியான திசையில் வைக்க வேண்டும். துளசி செடிகளை நடுவதற்கு வடக்கு மற்றும் வடகிழக்கு திசைகள் சிறந்தது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, இது எதிர்மறை ஆற்றலை நீக்கி, மகிழ்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.
வீட்டில் துளசி செடி மகிழ்ச்சி மற்றும் அமைதியை வழங்க உதவுகிறது. செடி வைத்திருக்கும் இடம் காற்றோட்டமாக இருக்க வேண்டும். தடைகள், குப்பைகள், துடைப்பங்கள் போன்றவை இல்லாமல் இருக்க வேண்டும்.