அம்பாறை வீரமுனைப் படுகொலைகள் என்பது ஒரு மினி முள்ளிவாய்க்கால்
முஸ்லிம் ஊர்காவல் படை மற்றும் முஸ்லிம் காடையர்கள் இன அழிப்பு அரசின் படைகளுடன் இணைந்து நடத்திய வீரமுனைப் படுகொலைகள் என்பது ஒரு 'மினி முள்ளிவாய்க்கால்' என Parani Krisna Rajani தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
கிழக்கு மண்ணிலிருந்து தமிழர்களை வாழ்ந்த சுவடுகளே தெரியாமல் அழித்தொழிப்பு செய்து அதை முஸ்லிம் குடியிருப்புக்களாக மாற்ற நடந்த பல அழித்தொழிப்புக்களின் உச்சமாக அது நடந்தேறியது. 1990 ஓகஸ்ட் மாதம் இது நடக்கிறது.
புலிகள் இந்த அழித்தொழிப்பு நடந்து மூன்று மாதங்களின் பின்பே ஒக்டோபர் 30 முஸ்லிம்களை வட தமிழீழத்திலிருந்து தற்காலிகமாக வெளியேற்ற முடிவெடுக்கிறார்கள் இந்த வரலாற்று செய்தியை பலர் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்கிறார்கள். இதன் வழி புலிகளுக்கு ஒரு இக்கட்டான நிலை திட்டமிட்டே இன அழிப்பு அரசின் புலனாய்வு வலையமைப்பால் உருவாக்கப்படுகிறது.
வட தமிழீழத்திலும் இன அழிப்பு அரசின் உதவியுடன் முஸ்லிம்களால் இப்படியான நில ஆக்கிரமிப்பு தொடர்ந்தால் அது போராட்டத்தின் போக்கையே மாற்றி விடும் அபாயாம் உணரப்படுகிறது. விளைவு தற்காலிக வெளியேற்றம் என Parani Krisna Rajani தனது முகநுால் பதிவில் குறிப்பிட்டுள்ளார்
மேலும் அவர் இது தொடர்பில் குறிப்பிடுகையில்...
இந்த வெளியேற்றத்தின் பல தர்க்க நியாயங்களை பல தடவை கூறிவிட்டேன் சொல்லப்படாமல் இன்னும் நிறைய இருக்கிறது. அதில் ஒன்று, கிழக்கு மண்ணில் முஸ்லிம்கள் ஆதரவுடன் தமிழர்கள் கொல்லப்பட்டு அவர்கள் நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட புலிகள் மவுனமாக இருப்பதென்பதும் வடக்கில் விடுதலைப் புலிகள் அவர்களுக்கு அரணாக இருப்பதென்பதும் ஒரு பிரதேச வாத பிரச்சினையாக கிழக்கு மக்களால் பார்க்கப்படும் ஒரு போக்கு உருவாகியது.
அதை தலைமைக்கு அறிவித்ததே இதே 'பிரதேசவாத' பிரச்சினையை பின்னாளில் கையிலெடுத்து போராட்டத்தைக் கூறு போட்டவர் கருணாதான்.
விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியிருக்காவிட்டால் ஒருவேளை அப்போதே பிரதேசவாத உடைப்பிற்கு புலிகள் முகம் கொடுத்து போராட்டம் நீர்த்துப் போயிருக்கலாம். இப்படி தவிர்க்க முடியாத பல நூறு காரணங்கள்.
ஆனால் எதையும் கணக்கில் எடுக்காமல் வரலாறு நெடுகிலும் விடுதலைப் புலிகளை குற்றவாளிகளாக்கும் போக்கு தொடர்வது வேதனை என சமூக ஆர்வலர் ஒருவர் மூகநூலில் பதிவிட்டுள்ளார்.