முன்னாள் வவுனியா நகரசபை உபதலைவர் காலமானார்!
முன்னாள் வவுனியா நகரசபை உபதலைவரான முத்துச்சாமி முகுந்தரதன் சுகயீனம் காரணமாக நேற்றையதினம் (06-11-2023) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
மாங்குளத்தை பிறப்பிடமாகவும் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட முத்துச்சாமி முகுந்தரதன், பிரபல இந்து நாகரிக ஆசானாக இருந்தார்.
மேலும், இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஊடாக தேர்தலில் போட்டியிட்டு வவுனியா நகரசபைக்கு தெரிவாகி உபதவிசாளராகவும் மக்களுக்கு சேவையாற்றியுள்ளார்.
இவ்வாறான நிலையில், சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் (06) அதிகாலை உயிரிழந்தார்.
இந்த நிலையில் இவரது பூதவுடல் வவுனியா பண்டாரிக்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதிகளவான மக்கள் மாணவர்கள் அரசியல் பிரமுகர்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முத்துச்சாமி முகுந்தரதன் அவரின் இறுதிக் கிரியைகள் நாளை (08-11-2023) காலை 9 மணிக்கு வவுனியா பண்டாரிக்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தட்சனாங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.