வவுனியாவில் பெரும் துயரம்; கொரோனாவுக்கு பலியான இளம் தாய் மற்றும் பச்சிளம் சிசு
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளம் தாயும், பிறந்து 7 நாட்களேயான சிசுவும் கொரோனா தொற்றினால் இன்று உயிரிழந்துள்ளனர்.
குறித்த பெண் பிரவசத்திற்காக வவுனியா வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்றுக்குள்ளனமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையயடுத்து குறித்த தாய்க்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தை உயிரிழந்ததுடன் இன்று காலை தாயாரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மரணமடைந்தவர்கள் பட்டக்காடு பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணும், தாயாருமே இவ்வாரு உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து உயிரிழந்தவர்களின் சடலத்தை பூந்தோட்டம் மயானத்தில் தகனம் செய்வதற்கான நடவடிக்கையை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.