வவுனியாவில் இளைஞர் ஒருவரை அதிரடியாக கைது செய்த பொலிஸார்! வெளியான பின்னணி
வவுனியா 22 வயதான இளைஞன் ஒருவர் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் இன்று வியாழக்கிழமை (10-03-2022) இடம்பெற்றுள்ளது.
மேலும் திருட்டு சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, சந்தை உள்வட்ட வீதியில் இருக்கும் நகை விற்பனையகம் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (04-03-2022) சங்கிலி ஒன்று திருடப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் முன்னெடுத்த விசாரணைகளின் போதே குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் திருடப்பட்ட சங்கிலி மீட்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.