வவுனியா மற்றும் கிரிபத்கொடயில் மீட்கப்பட்ட ஆயுதங்கள்; வெளிநாட்டு வாழ் தமிழருக்கு தொடர்பு?
வவுனியா மற்றும் கிரிபத்கொட உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களுடன் வெளிநாட்டு வாழ் தமிழர் ஒருவருக்கு தொடர்பிருப்பதாக பொலிஸாரை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி "பிரவீன்" என்ற ஒருவருக்குத் தொடர்பு இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

சிறப்பு விசாரணை
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையைக் கோடிட்டு தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த "பிரவீன்" என்ற சந்தேகநபர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில், இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படியே இந்த தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது