பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளரை திட்டித் தீர்த்த வனிதா விஜயகுமார்! யார் அது தெரியுமா?
தமிழில் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸில் இந்த வாரம் பிபி ரோஸ்ட் என்கிற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.
அந்த டாஸ்க்கில் மணிகண்டனை ரோஸ்ட் செய்ய வந்த அமுதவாணன், அவருக்கும் குயின்ஸிக்கும் இணைப்பு இருப்பது போல பேசியதை பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர் வனிதா விஜயகுமார் கடுமையாக திட்டியுள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை வனிதா விஜயகுமார். பிக் பாஸ் அல்டிமேட்டிலேயே, உள்ளே ஏடாகூடமாக பல மேட்டர்கள் நடப்பதாகக் கூறி அதிரடியாக வெளியேறி இருந்தார்.
இவ்வாறு இருக்கையில், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து அவர் வெளிப்படையாக விமர்சித்து இருப்பது பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் ரச்சிதா எங்கே சென்றாலும், அவரை பார்வையாலே விழுங்கி விடுவதை போல ராபர்ட் மாஸ்டர் பார்த்து வருவதை பார்க்கவே சகிக்க முடியாமல் பலமுறை வனிதா விஜயகுமார் விளாசியுள்ளார்.
ராஜாவாக ராபர்ட் மாஸ்டர் வரவேண்டுமென ரச்சிதா ஓட்டுப் போட்ட நிலையில், நூல் நுழைய ஊசி தாராளமாக இடம் கொடுத்து வருவதாக பிக் பாஸ் ரசிகர்களும் வனிதாவை போலவே விமர்சித்து வருகின்றனர்.
பிக்பாஸ் ரோஸ்ட் நிகழ்ச்சியில் ஷிவின் தான் கொஞ்சம் சரியாக விஜே கதிரவனை பத்து மணி டாக்டர் என்றும் மைக் மாட்டவும், பேட்டரி மாற்றவும் வரவில்லை என ரோஸ்ட் செய்திருந்தார்.
அத்தோடு மற்ற போட்டியாளர்கள் எல்லாம் ரோஸ்ட் பண்றேன் என்கிற பெயரில் அந்த எபிசோடையே வேஸ்ட் ஆக்கி விட்டனர் என முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான வனிதா விஜயகுமார் கொந்தளித்துள்ளார்.
மேலும் இது பிக் பாஸா இல்லை மாமா ஹவுஸா என்றே கோபத்தின் உச்சிக்கே சென்று வனிதா விஜயகுமார் பேசிய வீடியோ சமூகவலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரே நிகழ்ச்சியை இப்படி வெளுத்து எடுக்கிறாரே என பலரும் அதிர்ச்சியாகி உள்ளனர்.
அதிலும், அமுதவாணன் செய்த அந்த செயலை எல்லாம் மன்னிக்கவே முடியாதென கொந்தளித்துள்ளார் வனிதா.
விஜய் டிவியின் ப்ரொடக்ட் ஆன அமுதவாணன் ரோஸ்ட் பண்றேன் என்கிற பெயரில் குயின்ஸியை மணிகண்டன் கரெக்ட் பண்ணுவதாக பேசியதை பார்த்து அதிர்ச்சியடைந்த வனிதா விஜயகுமார், அமுதவாணன் என்னடா பண்ற என திட்டித் தீர்த்து விட்டார்.
அத்தோடு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி ஒன்றில் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றதும் என் அண்ணன் ஆளே மாறிவிட்டான் என புலம்பியிருந்தார்.
இவ்வாறு இருக்கையில், மணிகண்டனுக்கு திருமணமாகி குழந்தை இருக்கு, அவனை போய் எப்படி குயின்ஸியோட கனெக்ட் பண்ணி ரோஸ்ட் பண்ணுவ அதையும் மணிகண்டன் கம்முன்னு கேட்டுட்டு இருக்கானே என வனிதா விஜயகுமார் வெளுத்து வாங்கி உள்ளார்.