பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்ததற்கு வனிதா தான் காரணமா? ராபர்ட் மாஸ்டர் கொடுத்த பதில்
தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களில் ஒருவராக நாடக இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் கலந்துகொண்டார்.
பிக்பாஸ் வீட்டில் 50 நாட்களை கடந்து பாதி கிணறு தாண்டிய நிலையில் தான் கடந்த வாரம் எலிமினேஷன் ஆகி ராபர்ட் மாஸ்டர் வெளியேறினார்.
அப்பா பாசம் நினைவில் வந்து விட்டது. இந்த வாரம் நான் வெளியேறுகிறேன் என மக்களிடம் ராபர்ட் மாஸ்டர் சொன்ன நிலையில், அவர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
ரச்சிதா உடன் ரொமான்ஸ் செய்து வந்த நிலையில், அந்த பெயருடன் போகக் கூடாது என்பதற்காக அப்பா - மகள் டிராமாவுடன் ராபர்ட் வெளியேற்றப்பட்டு இருக்கிறார் என நெட்டிசன்கள் சர்ச்சையான ட்வீட்களை போட்டு வருகின்றனர்.
மேலும் இவர் வீட்டிற்குள் இருந்த காலத்தில் ரச்சிதாவிடம் மறைமுகமாக காதலை சொல்லி வந்தார். ஆனால் தற்பொழுது வீட்டை விட்டு வெளியேறியவுடன் ரச்சிதாவுடன் நட்பாக மட்டுமே இருப்பதாக கூறி வருகின்றார்.
இது ஒரு புறம் இருக்க நடிகை வனிதா விஜயகுமார் பலமுறை ராபர்ட் மாஸ்டரை கண்டித்து இருக்கிறார். மேலும் அவருக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்ததே நான் தான் என கூறி இருப்பார்.
இந்நிலையில் இது பற்றி தற்போது எலிமினேஷனுக்கு பின் பேசி இருக்கும் ராபர்ட் தான் வனிதாவிடம் முன்பு பேசியது உண்மை தான் என கூறி இருக்கிறார்.
நான் பிக்பாஸ் செல்லும் முன்பு வனிதாவிடம் பேசி ஷோ பற்றி கேட்டு தெரிந்துகொண்டேன். ஆனால் அவர் தான் வாய்ப்பு வாங்கி கொடுத்தார் என்பதெல்லாம் சுத்த பொய் என கூறி இருக்கிறார்.