சிறு நீராக நோயாளிகளுக்கு விசேட அறிவிப்பு
சிறு நீராக நோயாளிகளுக்கு விசேட அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
சிறுநீரக நோயாளிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளானால், அவர்கள் சிகிச்சை அளிக்கப்படும் வைத்தியசாலையைத் தொடர்புகொள்வது மிகவும் முக்கியம் என்று தேசிய சிறுநீரக மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளரும், மாளிகாவத்தை தேசிய சிறுநீரக ஊடுபகுப்பு மற்றும் சிறுநீரகமாற்று அறுவைசிகிச்சை நிறுவகத்தின் செயலாளருமான டொக்டர் அர்ஜுன மாரசிங்க தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட நபர் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு பொருத்தமானவரா இல்லையா என்பதை சிகிச்சை வழங்கும் வைத்தியசாலையின் அறிவுறுத்தலைக் கொண்டு முடிவு செய்யலாம் என்று குறிப்பிட்டார்.
பெரிட்டோனிடிஸ் நோயாளிகள் உட்பட, எல்லா சிறுநீரக நோய்க்கும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளும் தடுப்பூசி போட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
வீட்டில் சிறுநீரக நோயாளி இருக்கும் போது வீட்டிலுள்ள மற்றவர்கள் பொது இடங்களுக்குச் சென்று வந்தால் நோயாளி வீட்டில் தங்குவது பயனற்றது என்றும் தெரிவித்தார்.