புலிகளின் தலைவரை மீட்டுச் செல்ல முயன்ற அமெரிக்கா! பரபரப்பு தகவல்
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகள் செயற்படுவதற்கான காரணத்தை பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது அரச தரப்பு எம்.பி. எஸ்.பி.திஸாநாயக்க வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரை இறுதிப் போரை நிறுத்தி அழைத்துச் செல்ல அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் முயற்சித்தபோது இலங்கை அரசாங்கம் அதற்கு அனுமதிக்காமையினாலே தற்போது ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகள் செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை இறுதி போர்க் காலத்தில் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அழைத்து செல்ல முயற்சித்தார்கள். இதேவேளை பிரபாகரனின் குடும்பத்தினரை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு இறுதி போரை நிறுத்த முயற்சித்தனர்.
ஆனால் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தின் எவ்விதமான முயற்சிகளுக்கும் அனுமதி அளிக்கவில்லை. தலைவர் பிரபாகரனை காப்பாற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் முயற்சிகளைத் தோற்கடித்துவிட்டு இலங்கை அரசாங்கம் இறுதிபோரின் வெற்றிபெற்றது.
இதன்காரணமாகவே ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.