இலங்கை அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான அணுகுமுறையை பாராட்டிய அமெரிக்கா
நியாயமானதும், சமநிலையானதுமான பரஸ்பர வர்த்தக பேச்சுவார்த்தைகளை நடத்தும் இலங்கை அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான அணுகுமுறையை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
இலங்கை வர்த்தக சபையுடன் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பிராந்திய வர்த்தகத்தில் இலங்கையின் மூலோபாய நிலைப்பாட்டுடன், வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பல அமெரிக்க நிறுவனங்கள் தெற்காசியாவில் தங்களின் வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்த விரும்புவதாக ஜூலி சங் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.