ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த அமெரிக்க அரசியல் தலைவர் காலமானார்

Sri Lankan Tamils Sri Lanka Final War United States of America
By Sulokshi Feb 18, 2026 05:52 AM GMT
Report

   அமெரிக்காவின் மிகச்சிறந்த சிவில் உரிமைப் போராட்ட வீரரும், உலகத் தமிழர்களின் உற்ற நண்பருமான ரெவரெண்ட் ஜெஸ்ஸி ஜாக்சன் (Jesse Jackson) தனது 84-வது வயதில் காலமான செய்தி உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

2026, பிப்ரவரி 17 அன்று அவர் இயற்கை எய்தியதாக அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த அமெரிக்க அரசியல் தலைவர் காலமானார் | Us Political Leader Jesse Jackson Passed Away

ஈழதமிழர்களுக்காக  குரல் கொடுத்த வீரர்

அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபராகப் பராக் ஒபாமா பதவியேற்றபோது, அதைக் கண்டு நெகிழ்ந்து கண்ணீர் விட்டவர் ஜாக்சன். ஈழத் தமிழர்களின் வரலாற்றில் ஜெஸ்ஸி ஜாக்சனின் பங்கு என்றும் மறக்க முடியாதது.

யாழ் பல்கலைக் கழகத்தில் பகிடிவதை எனும் பெயரில் பாலியல் அத்துமீறல்கள்; கண்டுகொள்ளாத நிர்வாகம்; களமிறங்கிய சிஐடி!

யாழ் பல்கலைக் கழகத்தில் பகிடிவதை எனும் பெயரில் பாலியல் அத்துமீறல்கள்; கண்டுகொள்ளாத நிர்வாகம்; களமிறங்கிய சிஐடி!

2009-ஆம் ஆண்டு மார்ச் 26 அன்று லண்டனில் நடைபெற்ற "உலகத் தமிழர் பேரவை" (World Tamils Forum) மாநாட்டில் அவர் ஆற்றிய உரை இன்றும் பலரால் நினைவுகூரப்படுகிறது.

இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த அந்தத் தருணத்தில், "இந்தக் கொலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய தார்மீகக் கடமை உலகச் சமூகத்திற்கு இருக்கிறது" என அவர் உரக்கக் குரல் கொடுத்தார்.

ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த அமெரிக்க அரசியல் தலைவர் காலமானார் | Us Political Leader Jesse Jackson Passed Away

அவர் தனது உரையில், குண்டுகள் முழங்கும் போர்க்களத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும், உடனடிப் போர் நிறுத்தம் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். "வன்முறை என்பது ஒருபோதும் தீர்வாகாது அகிம்சை என்பது பலவீனம் அல்ல, அது மனதின் வலிமை" என்று குறிப்பிட்டார்.

வட அயர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைச் சுட்டிக்காட்டிய அவர், "துப்பாக்கிகளால் அல்ல, சிந்திப்பதன் மூலமே எதற்கும் தீர்வு காண முடியும்" என்று தமிழர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார்.

"நாம் போராடாத எந்தப் போரையும் வென்றதில்லை" என்ற அவரது தாரக மந்திரம் தமிழினத்திற்குப் பெரும் உந்துதலை அளித்தது. அதேசமயம் ஈழத் தமிழர்களின் வலியை உலகறியச் செய்யத் தனது "ரெயின்போ புஷ்" (Rainbow Push Coalition) அமைப்பு எத்தகைய உதவிகளையும் செய்யத் தயார் என அவர் அன்று முன்வந்தார்.

யுத்த களத்தில் காயமடைந்த முன்னாள் பெண் போராளி ; கடனை அடைக்க சிறுநீரக விற்பனை

யுத்த களத்தில் காயமடைந்த முன்னாள் பெண் போராளி ; கடனை அடைக்க சிறுநீரக விற்பனை

போர்க்களத்திலிருந்து தமிழர்களை மீட்பதற்கு உலக நாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தமிழர்களே வரையறுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

சர்வதேசச் சட்டம், மனித உரிமைகள் மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் நீதி கிடைக்க வேண்டும் என்பதே அவரது வாழ்நாள் லட்சியமாக இருந்தது. "நம்பிக்கை மிகவும் முக்கியமானது; உங்களால் ஒரு நிலையைத் தாண்டிச் சிந்திக்க முடிந்தால், உங்களால் அங்குக் செல்ல முடியும்" என்ற அவரது வார்த்தைகள் உலகெங்கும் உள்ள விளிம்புநிலை மக்களுக்கு இன்றும் வழிகாட்டியாக உள்ளன.

இலங்கையில் நிலவும் நெருக்கடி தீர்க்கப்பட்டு, அங்கு நீதியுடன் கூடிய அமைதி நிலவ வேண்டும் என்பதைத் தனது இறுதி உரையில் அவர் ஒரு கோரிக்கையாகவே முன்வைத்தார். ஜெஸ்ஸி ஜாக்சனின் மறைவு அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, நீதிக்காகப் போராடும் ஈழத் தமிழர்களுக்கும் ஒரு பேரிழப்பாகும்.

இந்நிலையில் மார்ட்டின் லூதர் கிங்கின் சீடராகத் தனது பயணத்தைத் தொடங்கி, அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த ஜாக்சனின் மறைவு, ஒரு சகாப்தத்தின் முடிவாகப் பார்க்கப்படுகிறது.

மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US