நாசாவில் கடமையாற்றி ஈழ மண்ணுக்கு பெருமை சேர்த்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் காலமானார்!
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் நீண்ட காலம் கடமையாற்றித் தான் பிறந்த யாழ்ப்பாணம் - குப்பிழான் மண்ணுக்கு பெருமை சேர்த்த தமிழ் விஞ்ஞானி கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி (Sir Waithilingham Duraiswamy) காலமானார்.
நேற்றைய தினம் வியாழக்கிழமை (17-03-2022) தனது 90 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.

1968 ஆம் ஆண்டு நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அப்பலோ-11 ஐ அனுப்புகின்ற குழுவில் அங்கம் வகித்தவர் வைத்திலிங்கம் துரைசாமி.
அவர் பிறந்து வளர்ந்த வீடு தற்போது குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமமாக விளங்குகின்றது.
கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி அண்மையில் தனது 90 ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருந்தார்.
இதேவேளை, அன்னாரின் மறைவு எமது குப்பிழான் மண்ணுக்கும், ஈழத்திற்கும் பேரிழப்பு. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறையருளைப் பிரார்த்திக்கின்றோம்.