பாதுகாப்பு பட்ஜெட்டை மேலும் அதிகரித்த அமெரிக்கா!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் இருந்து கடைசி அமெரிக்க துருப்புக்களை வெளியேற்றிய சில மாதங்களுக்குப் பிறகு, நாட்டின் "என்றென்றும் போர்களை" முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்ததன் ஒரு பகுதியாக, அமெரிக்க (யுனைடெட் ஸ்டேட்ஸ் காங்கிரஸ்) காங்கிரஸ் $ 777.7 பில்லியன் பாதுகாப்பு வரவு செலவு திட்ட ஒப்புதல் அளித்தது, இது கடந்த காலத்தை விட ஐந்து சதவீதம் அதிகமாகும்.
கடந்த வாரம் சட்டத்தை அங்கீகரித்த அமெரிக்க பிரதிநிதிகள் சபையைத் தொடர்ந்து, அமெரிக்க அமைச்சரவை புதன்கிழமை அன்று (29-12-2021) ( 89-10 வாக்குகளில் பட்ஜெட் சட்டத்தை பெருமளவில் நிறைவேற்றியது.
ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளின் முன்னணி உறுப்பினர்களால் இந்த நடவடிக்கை இரு கட்சிகளின் சாதனையாக வரவேற்கப்பட்டது.
மேலும் இந்த வரவு செலவு திட்டம் தொடர்பில் தெரியவருவது,
உலகின் மிகப்பெரிய இராணுவ செலவீனம் அளிக்கும் நாடாக அமெரிக்கா இதுவரையில் திகழ்ந்து வருகின்றது. இதேவேளை குறித்த பென்டகனின் வரவு செலவு திட்டம் ரஷ்யாவும் சீனாவும் இணைந்து ஆண்டுதோறும் பாதுகாப்புக்காக ஒதுக்குவதை விட இரண்டு மடங்கு அதிகமாகுமென தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் குறித்த வரவு செலவு திட்டமானது அடுத்த மிக பெரிய 11 நாடுகளின் இராணுவ வரவு செலவுத் திட்டங்களை விட அதிகம்" என்று காங்கிரஸின் முற்போக்கு காகஸின் தலைவி பிரமிளா ஜெயபால் புதன்கிழமை (29-12-2021) ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.