கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 16 வயது சிறுமி கொலை ; சந்தேகநபர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு
கம்பளையில் சிறுமி ஒருவர் கூறிய ஆயுத்தத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரும் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 27 வயதுடைய நபரொருவரே உயிரிழந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காதல் விவகாரம்
கம்பளையில் சிறுமி ஒருவர் கூறிய ஆயுத்தத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதையடுத்து, அவரைக் கைது செய்வதற்கு கம்பளை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் குறித்த சந்தேகநபர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் தொழில் புரிந்த குறித்த இளைஞர் நேற்றிரவு (14) வீடு திரும்பியிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவம் காதல் விவகாரம் காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.