ஒழுக்காற்று நடவடிக்கை ; பிரதி பொலிஸ் மாஅதிபர் பதவி நீக்கம்
ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக பிரதி பொலிஸ் மாஅதிபர் லலித் பத்திநாயக்க பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இ ந்த நடவடிக்கை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதி பொலிஸ்மா அதிபராக சஞ்சீவ தர்மரத்ன
இருப்பினும், மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக லலித் பத்திநாயக்க தொடர்ந்தும் பணியாற்றுவார் என குறிப்பிடப்படுகிறது.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக பணியாற்றிய சஞ்சீவ தர்மரத்ன, குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டதால், குறித்த வெற்றிடத்திற்கு லலித் பத்திநாயக்கவை நியமிக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.
பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதால், பிரதி பொலிஸ்மா அதிபராக சஞ்சீவ தர்மரத்ன தற்போது பணியாற்றி வருகிறார்.