அரச நிதியில் இருந்து தனியார் நிறுவனத்திற்கு 10 கோடி ரூபாய் ; முறைப்பாடு
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் நிதியைத் தவறாகப் பயன்படுத்தி, தனியார் ஊடக நிறுவனமொன்றுக்குச் சொந்தமான நிறுவனத்திற்கு சுமார் 10 கோடி ரூபாய் நிதி அமைச்சரவை அனுமதியின் கீழ் வழங்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகத்திற்கான சமூக ஊடக ஊடகவியலாளர்கள் சங்கம் நேற்று இந்த முறைப்பாட்டை கையளித்துள்ளது. இந்த முறைப்பாடு இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளது.

அரச நிதி ஒழுங்குவிதிகளை மீறி குறித்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனநாயகத்திற்கான சமூக ஊடக ஊடகவியலாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.