ஈரானின் முக்கிய தலைமையகத்தை அடியோடு அழித்த அமெரிக்கா
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் ( Iran’s Revolutionary Guards) தலைமையகத்தை தமது இராணுவம் முழுமையாக அழித்துள்ளதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
“உலகின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவத்தைக் கொண்டுள்ள அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதலால், இனிமேல் புரட்சிகர காவல்படைக்கு என்று ஒரு தலைமையகம் இல்லை” என அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 47 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கர்களைக் கொன்றுள்ள இந்த அமைப்பின் மீதான நேற்றைய தாக்குதல் மூலம் "பாம்பின் தலை" துண்டிக்கப்பட்டுள்ளதாக CENTCOM மேலும் தெரிவித்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், ஈரானின் மிக முக்கியமான இராணுவக் கட்டமைப்பின் மீதான இந்தத் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.