நிபந்தனைகளை ஏற்க முடியாது; டிரம்பை மிரளவிட்ட ஈரான்; அச்சத்தில் உலக நாடுகள் !
அமெரிக்காவின் 15 அம்ச அமைதி திட்டத்தை ஈரான் அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளமை போர் பதற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளது.
கடந்த காலங்களில் பேச்சுவார்த்தையின் போது அமெரிக்கா தங்களை ஏமாற்றியதாக குற்றம் சாட்டியுள்ள ஈரான், போர் நிறுத்தத்திற்கு ஐந்து அதிரடி நிபந்தனைகளை விதித்துள்ளது.

ஈரான் முன்வைத்துள்ள கோரிக்கை
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும், போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியின் மீதான ஈரானின் இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை ஈரான் முன்வைத்துள்ளது.
பிப்ரவரி 28 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த மோதல் தீவிரமடைந்துள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் போக்குவரத்தை ஈரான் கட்டுப்படுத்துவதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 102 டாலராக உயர்ந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும், போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியின் மீதான ஈரானின் இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை ஈரான் முன்வைத்துள்ளது.
பிப்ரவரி 28 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த மோதல் தீவிரமடைந்துள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் போக்குவரத்தை ஈரான் கட்டுப்படுத்துவதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 102 டாலராக உயர்ந்துள்ளமை உலக நாடுகளிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதுடன், பல நாடுகளில் எரிவாயும் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை நிலவுகின்றது.