வெளிவிவகார அமைச்சின் செயலாளரை சந்தித்த அமெரிக்கத் தூதுவர்
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் ( Ambassador Julie Chung )ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பில் ஜுலி சங் ( Julie Chung )தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரதுபதிவில் ,
இலங்கையின் ஜனநாயக மற்றும் வளமான எதிர்காலத்தை பாதுகாக்குமாறு இலங்கை மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Secretary to @MFA_SriLanka Aruni Wijewardane and I met to discuss ways the US can help SL secure the democratic, prosperous future the Sri Lankan people are demanding – including our commitment to support economic development, increased investment, and inclusive governance. pic.twitter.com/x6H7mqfXtu
— Ambassador Julie Chung (@USAmbSL) June 2, 2022
இதற்காக அமெரிக்கா எவ்வாறு இலங்கைக்கு உதவ முடியும் என்பது தொடர்பில் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, இலங்கையில் முதலீட்டை அதிகரித்தல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்தை ஆதரிக்கும் தங்கள் உறுதிப்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அமெரிக்க தூதுவர் ( Julie Chung ) பதிவிட்டுள்ளார்.