கடுமையான முதுகுவலிக்காக உயிருள்ள தவளைகளை விழுங்கிய பெண் ; அடுத்து நடந்த சம்பவம்
கிழக்கு சீனாவில் முதுகுவலிக்கு சிகிச்சையளிக்க எட்டு உயிருள்ள தவளைகளை விழுங்கிய பெண்ணொருவர் கடுமையான ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
82 வயதுடைய ஜாங் எனும் பெண் நீண்ட காலமாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், உயிருடன் தவளைகளை விழுங்குவதன் மூலம் முதுகுவலியை குறைக்கலாம் என சித்த மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.
கடுமையான வயிற்று வலி
இதனை நம்பிய பெண், முதல் நாள் 3 தவளைகளையும் மறுநாள் 5 தவளைகளையும் விழுங்கியுள்ளார்.
பின்னர் வயிற்றில் ஏற்பட்ட அசௌகரியத்தை உணர்ந்த பெண் விடயத்தை குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் அவருக்கு ஏற்பட்ட கடுமையான வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தொடர் சோதனையில் அவரது உடலில் ஸ்பார்கனம் போன்ற ஒட்டுண்ணிகளின் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.