மஹிந்தவின் பாதுகாப்பிற்காக உண்ணாவிரதத்தில் குதித்த தேரர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பைத் திரும்பப் பெறுவதற்கான அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து, ரத்துபஸ்வல தேரிபஹல சிறிதம்ம தேரர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தேரர் இன்று (08) மதியம் குறித்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
தங்காலையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் கால்டன் இல்லத்துக்கு எதிரே அமைந்துள்ள டி.எஸ். சேனநாயக்க சிலைக்கு முன்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிற முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை மீண்டும் வழங்கக் கோரி அவர் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
ஒரு காலத்தில் தேசத்திற்கு சேவை செய்த முன்னாள் அரச தலைவரின் பாதுகாப்பை நீக்குவதற்கான முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அதிகாரிகள் திரும்பப் பெறப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மீட்டெடுக்கும் வரை தனது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.