அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இரங்கல்
இலங்கையில் சீரற்ற காலநிலையால், மண்சரிவு மற்றும் கடுமையான வானிலை தாக்கத்தால் உயிரிழந்த இலங்கையர்களுக்கு அமெரிக்க இரங்கல் தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

ஆழ்ந்த இரங்கல்கள்
மண்சரிவு மற்றும் கடுமையான வானிலை தாக்கங்களில் உயிரிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் சமூகங்களுக்கு உதவ முதலாவது உதவி பணியாளர்கள், இராணுவத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் கடுமையாக பணியாற்றி வருவதற்கு அவர்களுக்கு அமெரிக்கா நன்றியை தெரிவித்துள்ளது.
மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அதிகாரபூர்வமான எச்சரிக்கைகளை பின்பற்றவும் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் குறிப்பிட்டுள்ளார்.