இலங்கைக்கு அருகில் உருவானது தித்வா புயல்; அடுத்த 24 மணித்தியாலம் கனமழை!
இலங்கைக்கு அருகில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (27) சற்று நேரத்துக்கு முன்னர் புயலாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயலுக்கு 'தித்வா' (Ditwah) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

200 மி.மீற்றர் கனமழை பெய்யும்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 24 மணித்தியாலத்திற்கு நாட்டின் பல பகுதிகளில் 200 மி.மீற்றர் கனமழை பெய்யும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
யேமன் நாடால் பரிந்துரைக்கப்பட்ட இந்த பெயர் (Ditwah) , உலக வளிமண்டலவியல் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் வெப்பமண்டல புயலுக்கான குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளால் தயாரிக்கப்பட்ட முன் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ளடங்கியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலும் கன மழையால் வெள்ள அனர்தம் ஏற்படுள்ளதுடன் நில சரிவுகளிலுல் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். எனவே நாட்டு மக்கள் அனைவரும் அவதானத்தோடும் முன்னெச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்..