அனைத்து சிறைச்சாலைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அவசர அழைப்பு
நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளின் சிரேஷ்ட அதிகாரிகளையும் நாளை (08) காலை 7.30 மணிக்கு விசேட கூட்டமொன்றிற்காக வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட நிலைமை குறித்து பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த நீதியமைச்சர் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார இதனைத் தெரிவித்தார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) மற்றும் முன்தினம் (05) ஏற்பட்ட மோதல்களினால் 7 அதிகாரிகள் உட்பட 27 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் பலத்த காயமடைந்த 20 பேர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.