மனித நுகர்வுக்குத் தகுதியற்ற 4,250 தொன் சீனி பறிமுதல்
கொழும்பு பேலியகொடை, பெத்தியாகொட பகுதியில் மனித நுகர்வுக்குத் தகுதியற்ற 4,250 தொன் சீனியுடன் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, மனித நுகர்வுக்குப் பொருத்தமற்றதாகக் கருதப்படும் சீனித் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின்போது, சுமார் 850 மில்லியன் ரூபாய் பெறுமதியான 85,000 சீனி மூட்டைகள், மொத்தமாக 4,250 தொன் சீனி கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தியோல் கடுவெல, அங்கொட, பிலியந்தலை மற்றும் ஹட்டன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.