வெளியிடப்படவுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகளின் விபரம்
நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகள், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவுள்ளது.
அதன்படி அவர்களின் விபரங்க்கள் இன்று (07) புதுப்பிக்கப்பட்டு அவர்களின் உறவினர்களுக்கு அறிவிக்கப்படும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

பல கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு...
நேற்று ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளின் நிமித்தம் பல கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகள் எந்தெந்த சிறைச்சாலைகளில் உள்ளனர் என்ற விபரங்கள் மற்றும் தற்போதைய வன்முறைகளில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள், உயிரிழந்தவர்கள் பற்றிய முழுமையான விபரங்கள் இன்று முறைப்படி புதுப்பிக்கப்பட்டு உறவினர்களுக்குத் தெரியப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விபரங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் வரை, கைதிகளின் உறவினர்கள் எவரும் நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்திற்குள் வருவதைத் தவிர்க்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.