பிக் பாஸில் வைல்ட் கார்டு என்ட்ரியில் வரவுள்ள நடிகை...எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
தமிழ் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் தற்போது அதன் 5வது சீசன் நடைபெற்று வருகிறது.
இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர் அதில் நமீதா மாரிமுத்து உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பதியிலையே விலகினார். இதனையடுத்து தற்போது பிக் பாஸின் எலிமினேஷன் பிராசஸ் வரவுள்ளது.
அதற்கான நபர்களும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக நடிகை ஷாலு ஷம்மு-வை வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று அக்டோபர் 17ஆம் திகதி பிக்பாஸ் வீட்டில் விஜய் டிவி முடிவெடுத்து விட்டது. சமூக வலைத்தளத்தில் சற்று பிரபலமான இவரை வைல்ட் கார்டு என்ட்ரியாக்கி நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தைக் கூட்ட பிக் பாஸ் முடிவு செய்துள்ளது.
