லஞ்சப் பணத்தை பிரித்துக்கொள்ள உறுதிமொழி எடுத்த கவுன்சிலர்கள்; வைரலாகும் காணொளி!
இந்தியா உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் கங்கை நீரின் மீது சத்தியம் செய்து, லஞ்சமாக கிடைக்கும் பணத்தை தங்களுக்குள் நேர்மையாக பகிர்ந்து கொள்வது தொடர்பாக உறுதி மொழி எடுத்த ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.
வெளியான காணொளியில் , ஒருவர் வாட்டர் பாட்டிலில் உள்ள கங்கை நீரை அங்குள்ள மற்ற நபர்களின் கைகளில் ஊற்றுகிறார்.

கங்கை நீரின் மீது சத்தியம்
அதன் பிறகு அவர் “மாநகராட்சிக்கு கிடைக்கும் பணம் 60 கவுன்சிலர்களுக்கும் சமமாகப் பகிரப்படும். குழுவில் உள்ள யாருக்காவது பிரச்சினை ஏற்பட்டால், அனைவரும் ஒற்றுமையாக அவருக்கு ஆதரவாக நிற்போம்” என சத்தியம் செய்கிறார்.
அதைத் தொடர்ந்து மற்ற அனைவரும் அதே வாக்கியங்களை மீண்டும் கூறி சத்தியம் செய்கின்றனர். மேலும், அந்த வீடியோவில் சத்தியத்தை மீறிய ஒருவரை துரோகி என்று குறிப்பிடுவதும் இடம்பெற்றுள்ளது.
Yogi Adityanath ji should take immediate action against councillors who are openly talking about corruption, rising above party politics and acting against such conduct regardless of which party holds the majority.
— The Frustrated Indian (@FrustIndian) August 25, 2026
In Shahjahanpur, Uttar Pradesh, municipal councillors reportedly… pic.twitter.com/MQd9V4zJi1
இந்த வீடியோ கவுன்சிலர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் சவும்யா குருராணி , “இந்த வீடியோ 2025 நவம்பரில், முந்தைய மாநகராட்சி ஆணையர் பதவியில் இருந்த காலத்தில் பதிவு செய்யப்பட்டதாகவும், எனினும் அது குறித்து விசாரணை தொடங்க்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளன.