வயதான பெற்றோரின் சொத்தை பறித்து துரத்திவிட்ட மகன்; இலங்கையில் இப்படி ஒரு மோசமான சம்பவம்!
வயதான பெற்றோரின் சொத்தை பறித்து விட்டு அவர்களை அநாதரவாக, மகன் வீதிக்கு துரத்திவிட்ட துயரம் சம்பவம் ஒன்று தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வயதான அந்த தம்பதிகளிற்கு ஒரு மகன், மற்றும் மகள் உள்ளனர்.

இருக்க வசிப்பிடமின்றி வீதிக்கு வந்த பெற்றோர்கள்
மகன் ஜப்பான் நாட்டுக்கு சென்று வந்த நிலையில் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வருகின்றார். மகள் கணவனை இழந்து வறுமையில் வாடுவதாக அந்த வயோதிப தம்பதிகள் கூறியுள்ளனர்.
இந் நிலையில் வெளினாட்டில் இருந்து திரும்பிய தமது மகன், பெற்றோரின் சொத்துக்ளை பறித்ததோடு அவர்காளின் உடமைகளுக்கும் தீவைத்து, விட்டைவிட்டு வெளியேற்றி விட்டதாக கண்ணீருடன் அந்த வயதான தம்பதிகள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமது மகள் மிகவும் வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ள அந்த வயதான தம்பதி, தாம் தங்குவதற்கு இருப்பிடம் ஒன்றை தேடிவருவதாக கூறியுள்ளனர்.
அதேவேளை பெற்றோரை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என அண்மையில் அரசாங்கம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
குறித்த தம்பதியின் சோக கதை சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், பெற்றோரை கைவிட்ட மகன் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க வெண்டும் என சமூக வலைத்தளவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.