சேவையிலிருந்து விலகத் தயாரில்லை; வைத்தியர் ருக்ஷான் தெரிவிப்பு
தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தாம் ஒருபோதும் தேசிய வைத்தியசாலையின் அலுவலகத்தில் தடுத்து வைக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
ஒரு சில ஊழியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதற்காக வேலையை விட்டு விலகத் தயாராக இல்லை என்றும் பிரதிப் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் தொடர்பில் வைத்தியர் ருக்ஷான் பெல்லன வௌியிட்ட கருத்து காரணமாக ஊழியர்கள் மத்தியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
அந்த கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வைத்தியர் ருக்ஷான் பெல்லனவை சுமார் 06 மணித்தியாலங்கள் அலுவலக காவலில் வைத்து ஊழியர்கள் பணியாற்றியதோடு, இன்றும் தேசிய வைத்தியசாலையில் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வைத்தியர் ருக்ஷான் பெல்லன, தேசிய வைத்தியசாலைக்கு சேவையாற்ற வந்தால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என கனிஷ்ட ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.