3 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்திய ரூபாய் வீழ்ச்சி
மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாய் மதிப்பு மிகப்பெரிய வருடாந்திர வீழ்ச்சியை சந்திக்கும் நிலையில் உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வரலாறு காணாத வெளியேற்றம் மற்றும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இல்லாததால் ஆசியா முழுவதும் பங்குச் சந்தையில் பங்குச் சந்தை சரிவு ஏற்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிக மோசமான சரிவு
இந்த வர்த்தக ஒப்பந்தத்தால் மீட்சிக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. 2025 ஆம் வருடத்தின் இறுதி நாளான இன்று (31) காலை 10 மணிக்கு அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 89.8650 ஆக இருந்தது.
இது இந்த ஆண்டிற்கான 4.74% சரிவைக் குறிக்கிறது. இது 2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிக மோசமான சரிவாகும் – அப்போது அது சுமார் 10% சரிந்தது. இந்த ஆண்டில் நாணயம் வீழ்ச்சியில் மீண்டும் மீண்டும் சாதனை அளவை எட்டியது.
ஒரு கட்டத்தில் டொலர் ஒன்றுக்கு நிகராக ரூபாயின் பெறுதி 91 என்ற நிலையைத் தாண்டிச் சென்றது. இது நாணயத்தின் நீடித்த தேய்மான அழுத்தத்தை எடுத்துக்காட்டுகிறதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்்.