முடிவுறாத வழக்கு ....முடிவுறபோகிறதா கட்சி அரசியல்?
உள்ளுராட்சிமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இலங்கை தமிழரசு கட்சியின் நிர்வாக குழப்பங்களும் கட்சிமீதான வழக்குகளும் வரும் தேர்தல்களில் வடக்கில் மாத்திரமல்ல கிழக்கிலும் தமிழரசுக்கு வீழ்ச்சியை உருவாக்க கூடும் .
வடக்கில் காணப்படும் பிரதேச சபைகளை தமிழரசு தனித்து அமைக்க முடியாத சூழலை உருவாக்குவது மாத்திரமல்ல கூட்டாக கூட ஆட்சியை அமைக்க முடியாத நிலையே ஏற்படும்.
கூட்டாக கூட ஆட்சியை அமைக்க முடியாத நிலை
கிளிநொச்சி மாத்திரம் சிலவேளை விதிவிலக்காக மாறலாம்.பாராளுமன்ற தேர்தலில் கண்ட மோசமான வீழ்ச்சியை கூட எண்ணி கவலைபாடாத கட்சி மேல் மட்டம் மீது மக்கள் இன்னும் வெறுப்படைந்தே வருகிறார்கள்.
கிழக்கிலும் திருகோணமலை, மட்டக்களப்பில் மாநகர சபைக்குள்வரும் வட்டாரங்களை கூட தமிழரசு இழக்கலாம் இங்கும் கடந்த காலங்களை விட கட்சியின் நிர்வாக மறைவாலும் அடிப்படை பிரச்சனையாக கட்சி மீதான வழக்கே மக்களின் பார்வையில் மோசமாக பார்க்க படுகின்றது.
இதனால் மட்டக்களப்பும் இதர கட்சிகள் தங்கள் ஆதிக்கத்தை உருவாக்கலாம்.சுவர் இருந்தாலே சித்திரம் வரையலாம் மக்களின் திரட்ச்சியான ஆதரவு இல்லாமல் கட்சியை எப்படி நீண்ட காலத்துக்கு கொண்டு செல்வது?
அடுத்த வழக்கு எதிர்வரும் 6ம் மாதம் தவணையிடப்பட்டு இருக்கும் நேரத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலும் முடிந்துவிடும் கட்சியையும் முடித்துவிடுவார்களோ என்று எண்ண தோன்றுகிறது. மத்திய குழு உறுப்பினர்கள் ஆக்கப் பூர்வமான என்ன விடயங்களை பேசுகின்றார்கள் என்று தெரியவில்லை.
அதில் பெரும்பாலாவர்களுக்கு கட்சியை பற்றிய நீண்ட கால தூரநோக்கு இருப்பதாக தெரியவில்லை. இந்நிலையில் கட்சியின் எதிர்காலம் காலத்தின் கையில் தான் உள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.