காதலிக்குமாறு டார்ச்சர்; இளம்பெண் விபரீத முடிவு; உறவினர்கள் அரங்கேற்றிய கொடூரம்
தமிழகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருதலைக் காதல் டார்ச்சர் தாங்க முடியாமல் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது,

கல்லாலும், கட்டையாலும் தாக்கி கொலை
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள பெரியவிளையை சேர்ந்தவர் ஏஞ்சல். இவரை அதே பகுதியை சேர்ந்த ஆண்டனி ராஜ் என்பவர் ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார்.
மேலும் தன்னை காதலிக்குமாறு அடிக்கடி ஏஞ்சலை சந்தித்து அவர் வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.. இதையடுத்து ஏஞ்சலின் தந்தை கடந்த மே மாதம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதன் அடிப்படையில் ஆண்டனி ராஜ் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் மீண்டும் ஏஞ்சலுக்கு லவ் டார்ச்சர் கொடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த ஏஞ்சல் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது அவரின் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க ஆண்டனி ராஜ் வந்ததாக சொல்லப்படுகிறது. அவரைப் பார்த்து ஆத்திரமடைந்த ஏஞ்சலின் உறவினர்கள் அவரை கல்லாலும், கட்டையாலும் தாக்கி கொலை செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.