நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் கைது!
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஆஜரான போது கைது செய்யப்பட்டுள்ளார்.
முறையான முறையைப் பின்பற்றாமல் தெரிவுசெய்யப்பட்ட 3 நிறுவனங்களுக்கு மாத்திரம் பொஸ்பேட் ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தமை மற்றும் அந்த நிறுவனங்களுக்கு அவசியமான அனுமதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக குறித்த நிறுவனங்களிடமிருந்து 81 இலட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சாமர சம்பத் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் அவரது தனிப்பட்ட செயலாளராகக் செயற்பட்ட சுமதிபால லியனாராச்சி என்பவரும் இந்த விசாரணைக்குத் தொடர்புடையதாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.