பெரமுனவின் மஹிந்த கஹந்தகமவுக்கு விளக்கமறியலில்!
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் ஒக்டோபர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய குற்ற விசாரணைப் பிரிவினரால் கடந்த 6ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த இவரை, இன்றைய தினம் (12) வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
மஹிந்த கஹந்தகம ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே அவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.