ஈரான் மீது இதுவரை இல்லாத அளவிலான பாரிய தாக்குதல்கள்
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் ஆரம்பித்தது முதல் இதுவரையான காலப்பகுதியில், இன்றைய தினமே ஈரான் மீது அதிகளவிலான தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளதாக பென்டகன் தலைவர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான இன்றைய தாக்குதல்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக உக்கிரமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறப்பதற்கு ஈரான் நடவடிக்கை எடுக்கத் தவறினால், நாளைய தினம் இதைவிட மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள காலக்கெடு முடிவடையவுள்ள நிலையில், அமெரிக்காவின் தாக்குதல் வேகம் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதை இந்த அறிவிப்பு உறுதிப்படுத்துகிறது.
ஈரானின் பாலங்கள் மற்றும் மின்சார உற்பத்தி நிலையங்களை 4 மணிநேரத்தில் அழிப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், பென்டகன் தலைவரின் இந்த அறிவிப்பு போர்ச் சூழலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.