பெண்ணின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய பல்கலை மாணவர்கள்; செய்த மோசமான செயல்!
பெண்ணின் அந்தரங்க வீடியோவை சமூக வலைத்தளமான வாட்ஸ் அப் ஊடாக பகிர்ந்தமை மற்றும் அதனைத் தம்வசம் வைத்திருந்தமை தொடர்பாக இரு மாணவர்கள் திங்கட்கிழமை (16) அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பலாங்கொடை, திலகபுர பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சைபர் குற்ற புலனாய்வு பிரிவினரால் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் பல்கலைக்கழக மாணவர்கள்
பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களால் சைபர் குற்ற புலனாய்வு பிரிவில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு இணங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இருவரும் 21 வயதுடைய அம்பலாங்கொடை, திலகபுர பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதுடன் அதில் ஒருவர் தனியார் பல்கலைக்கழகமொன்றில் மென்பொருள் பொறியியல் பீடத்தில் பயின்று வருபவர் என்பதுடன் மற்றையவர் ஒருகொடவத்தையிலுள்ள தொழில்நுட்ப கல்லூரியொன்றில் மோட்டார் வாகன பொறியியல் பாடநெறியை பயின்று வருபவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.