யாழில் மதுபோதையில் பல்கலை மாணவர்கள் அட்டகாசம்! நையப்புடைப்பு
யாழ்ப்பாணம் குருநகர், சிறுதீவு பகுதியில் மதுபோதையில் அட்டகாசத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் குழுவொன்று, அட்டைப் பண்ணையாளர்களால் நையப்புடைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவத்தில் தாக்குதலில் காயமடைந்த 7 பல்கலைகழக மாணவர்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மதுபோதையில் அட்டகாசம்
அதேவேளை பல்கலைகழக மாணவர்களின் தாக்குதலில் தாமும் காயமடைந்ததாக குறிப்பிட்டு அட்டைப்பண்ணை உரிமையாளரும், மற்றொரு பணியாளரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்தனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேர் கொண்ட குழுவொன்று, குருநகர் சிறுதீவு பகுதிக்கு சென்று, மது அருந்தி பொழுதை போக்கியுள்ளனர். அதோடு போதை தலைக்கேறிய நிலையில் அவர்கள் அங்கு அமைந்துள்ள அட்டைப்பண்ணைக்குள்ளால் நீச்சலடிக்க முற்பட்டுள்ளனர்.
அப்போது அட்டைப் பண்ணைக்குள்ளால் நீச்சலடிக்க வேண்டாம் என பண்ணை தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். எனினும் அதனை கேட்காத மாணவர்கள் , அட்டை பண்ணைக்குள் நீச்சலடித்துள்ளனர்.
இதனால் இரு தரப்புக்குள்ளும் வாக்குவாதம் முற்றியதை அடுத்து அட்டைப்பண்ணையாளர்கள் போதையில் இருந்த பல்கலைக்கழக மாணவர்களை நையப்புடைத்ததாக தெரியவருகின்றது.