ஆங்கிலத்தில் பேசாதே... தமிழில் பேசு அம்மா; வைரலாகும் சிறுவனின் காணொளி
தாய் ஒருவர் தன் மகனிடம் ஆங்கிலத்தில் பேசியபோது ஆங்கிலத்தில் பேசாதே... தமிழில் பேசு அம்மா என சிறுவன் அழுது அடம்பிடிக்கும் காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
சிறுவன் ஒருவனிடம் அவனுடைய தாய் ஆங்கிலத்தில் பேசுகிறார். அது பிடிக்காமல், அந்த சிறுவன் அழுது கொண்டே, ஒழுங்கா பேசுமா என கூறுகிறான். அதற்கு, அழக்கூடாது என ஆங்கிலத்தில் கூறியபடியே, ஒழுங்காக என்றால் எப்படி? என அவர் தமிழில் கேட்கிறார்.
வைரலாகும் காணொளி
அதற்கும் தமிழில் பேசு அம்மா என கூறி சிறுவன் அடம்பிடிக்கின்றார் பள்ளியில் ஆசிரியர் எப்படி பேசுவார்கள்? தமிழிலா அல்லது ஆங்கிலத்திலா என கேட்க, சிறுவன் யோசித்தபடி ஆங்கிலத்தில் என பதில் கூறுகிறான்.
உடனே அந்த தாய், அதனால் நானும் ஆங்கிலத்திலேயே பேசுகிறேன் என ஆங்கிலத்தில் கூற, அதற்கு சிறுவனோ நான் சொன்னத கேளு என மழலையாக கூறுகிறான். இந்நிலையில் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடியோவை பார்வையிட்டு உள்ளனர்.
இவளுக English இம்சைக்கு அளவேயில்ல.
— BINDU-ബിന്ദു. (@_BindhuR_) August 17, 2025
"ஒழுங்கா பேசுமா",
"என்னம்மா பிரச்சனை உனக்கு"
எவ்ளோ மனசு கஷ்டம்ல கேக்குறான்.
ஸ்கூல்லயும் pressure ,
வீட்டுலயும் pressure .
பாவம் பையன்🥺.
அம்மாக்கும், teacher க்கும் different தெரியாத இவ எல்லாம்.. pic.twitter.com/ZP3CgyNjIK
தற்போதைய காலகட்டத்தில் தமிழில் பேசுவதை தவிர்த்து ஆங்கிலம் கலந்த தமிழிலேயே பலரும் பேசி வருகின்றனர்.
அலுவலகங்களில்ம் , வெளியேறும் ஏன் வீடுகளிலும் இதே நிலமைதான். இந்நிலையில் தமிழில் தாயை பேசவைக்க சிறுவன் அழுது அடம்பிடிக்கும் காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.