அமெரிக்காவில் விவசாயம் செய்யப்படும் முருங்கை உற்பத்தி!
முருங்கை இலையோ, முருங்கைக் காயோ எங்கே கிடைத்தாலும் பெற்றுச் சாப்பிடு கிடைக்காவிட்டால் “கப்சூல் “வடிவில் கிடைக்கிறது,
அதனை நாள் ஒன்றுக்கு நாலுப் படி எடுத்துக்கொள் இரத்தக்கொதிப்பு, இரத்தக்கொழுப்பு இரண்டுமே அருகே வராது, என்று அண்மையில் அமெரிக்காவில் சந்தித்த சிக்கி என்பவர் அமெரிக்க பயணத்தின் போது தெரிவித்ததாக, சுவிட்சர்லாந்தின் பிரபல ஆதா நிதி நிறுவனத்தின் அதிபர் டாக்டர் கல்லாறு சதீஷ் தெரிவித்தார்.
அமெரிக்கர்கள் முருங்கை இலை மற்றும் முருங்கைகாயின் மருத்துவ குணங்கள் தொடர்பாக இலங்கையர்களை விட அதிக நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர் எனவும் கல்லாறு சதீஷ் தெரிவித்துள்ளார்.
முருங்கையின் துளிர்களைப் பச்சையாகவே சாப்பிடுதல் மேலும் நல்லது. மியாமியில் உள்ள அமெரிக்க நண்பர் ஒருவர் அவர் தோட்டத்திலுள்ள முருங்கைத் துளிர்களைப் பறித்து பச்சையாக உண்டு காட்டி அத்தனை தூரம் முருங்கை ஒரு அற்புத நோய் நிவாரணி என்கிறார்.
நிக்கரகுவாவில் தனது நண்பர் முருங்கை பயிரிட்டு அதனைக் கப்சூல் செய்து விற்பனை செய்வதாகவும், அமெரிக்காவில் அதனைத் விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். 120 கப்சூல்கள் 20 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்கிறார்
எமது நாட்டில் எமது இல்லங்களில் வீட்டுக்கு வீடு உள்ள முருங்கையும், தென்னையும் மட்டுமன்றி மா,பலா, வாழை, எனும் முக்கனிகளும் அரிசி வகைகளும் இயற்கையின் கொடை இதை எமது மக்கள் சுய உற்பத்தி செய்தல் சுகநல வாழ்வுக்கு அடிப்படையாக அமையும் என தெரிவித்துள்ளார்.