தேர்தலுக்கு தயாராகும் ஐக்கிய தேசிய கட்சி ; வெளியான அறிவிப்பு
இந்த வருட இறுதியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பிரதான கட்சிகள் தமது தேர்தல் வியூகங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்.
இவ்வாறானதொரு நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க நிச்சயம் போட்டியிடுவார் எனவும் இதனை நான் உறுதியாகவே கூறுகின்றேன் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க அரசியல் இராஜதந்திரம் தெரிந்தவர். பதற்றப்படமாட்டார். உரிய நேரத்துக்கு உரிய வகையில் வருவார்.அது குறித்து எவரும் சந்தேகம் கொள்ளவேண்டியதில்லை.
இதேவேளை மே முதலாம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி பாரிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.