ஜே.ஆர்.ஜயவர்தனுக்கு நிகழ்ந்த எதிர்பாராத சம்பவம்! டலஸ் வெளியிட்ட தகவல்
ஜே.ஆர் தனது மருமகன் தேர்தலில் தோற்று தனது சொந்த அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதியாக வருவார் என நினைத்திருக்க மாட்டார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட சபை உறுப்பினர் டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன (J.R Jayawardena) 44 வருடங்களுக்கு முன்னர் அரசியலமைப்பை உருவாக்கிய போது, இவ்வாறானதொன்று நிகழும் என்று தாம் நினைக்கவில்லை.
அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 44 வருடங்களின் பின்னர் ஜே.ஆரின் மருமகன் பொதுத்தேர்தலில் தோல்வியடைந்து தேசியப்பட்டியலில் இருந்து நாடாளுமன்றம் சென்று பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் ஆனதற்கு அரசியலமைப்பின் காரணமாகவே.
எதிர்காலத்தில் இவ்வாறான திரிபுகள் ஏற்படாத வகையில் நாட்டு மக்களுக்கு நட்புறவான அரசியலமைப்பை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.