ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ; புலனாய்வு பிரிவு எச்சரிக்கை
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பொது இடங்களில் பொது மக்கள் கூட்டங்களில் பங்கு கொள்வது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அரச புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜனாதிபதிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதாள உலக குழு
குறிப்பாக, நாட்டில் தற்போது பாதாள உலக குழு நடவடிக்கைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், அந்த பாதாள உலக நடவடிக்கைகளுக்குப் பின்னால் வேறு ஏதேனும் செல்வாக்கு உள்ளதா என்ற சந்தேகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பாதாள உலக நடவடிக்கைகளுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதியும் அரசாங்கமும் கூறியிருந்தாலும், இந்த நேரத்தில் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிக்க, அவரது பாதுகாப்பு கண்டிப்பாக உறுதி செய்யப்பட வேண்டும் என்று பல கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, பொதுமக்களுடன் ஜனாதிபதி நேரடியாக கலந்துகொள்வதை குறைக்க வேண்டும் என பாதுகாப்புப் படையினர் ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.