பேரழிவில் இருந்து மீள இலங்கைக்கு கைகொடுக்கும் ஐ. நா
டித்வா புயல் தாக்கத்தில் பெரும் பேரழிவை சந்தித்துள்ள இலங்கையில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க ஐக்கிய நாடுகள் சபை தயாராக உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்ரொனியோ குட்டெரெஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஐ. நா. பொதுச்செயலாளர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,

நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சி
இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மலேசியாவில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் ஏற்பட்ட உயிர் இழப்பு குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலையும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது ஒற்றுமையையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்க ஐக்கிய நாடுகள் சபை தயாராக உள்ளது என்றும் ஐ. நா. பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.