உக்ரைனின் அதிரடி தாக்குதல்: நிலைத்தடுமாறிய ரஷ்ய படைகள்! எடுத்த திடீர் முடிவு
உக்ரைன் மீது தாக்குதல் நடத்த மறுத்து 300 ரஷ்ய துருப்புகள் திரும்பியதாக உக்ரைன் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ரஷ்ய துருப்புகளிடம் இன்னும் மூன்று நாட்களுக்கே தேவையான குண்டுகளும், எரிபொருளும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை ரஷ்யாவின் பெரியதாக கருதப்படும் 13 தாக்குதலை முறியடித்துள்ளதாகவும் உக்ரைன் கூறியுள்ளது.
இதனிடையே, உக்ரைன் போரில் தொடர்ந்து வேகமாக முன்னேற முடியாமல் ரஷ்ய துருப்பு தடுமாறுகின்றது. பலமான எதிர் தாக்குதல் நடத்தி வரும் உக்ரைன் இராணுவம், தலைநகர் கீவ்வின் புறநகரை ரஷ்யாவிடம் இருந்து மீட்டுள்ளது.
இருப்பினும், மரியுபோல் நகரில் தொடர்ந்து கொடூர தாக்குதல் தொடர்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய இராணுவம் நடத்தி வரும் போர் 28 வது நாளாக தாக்குதலை நடத்தி வருகின்றது.
ஆரம்பத்தில் வேகமாக முன்னேறிய ரஷ்ய இராணுவம் தற்போது பல இடங்களில் முடங்கி உள்ளது. கெர்சன் நகரை கைப்பற்றிய பிறகு தலைநகர் கீவ், கார்கிவ் ஆகிய 2 பெரிய நகரங்களை குறிவைத்து ரஷ்ய துருப்புகள் முன்னேறின.
எனினும் தற்போது 2 இடங்களிலும் ரஷ்ய இராணுவம் திணறி வருகிறது.
குறிப்பாக, தலைநகர் கீவ்வின் புறநகர்களில் ஒன்றான மக்காரிவிலிருந்து ரஷ்ய துருப்புகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.