தமிழர் பகுதியில் அரச–தனியார் பேருந்து சாரதிகளுக்கு இடையே மோதல்
இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை தனியார் பேருந்துக் குழுவினர் தாக்கும் காட்சி தற்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்றுக் காலை 07.30 மணியளவில் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு இருந்து புறப்பட்ட அரச பேருந்து காலை 07.30 மணியளவில் வவுனியாவை சென்றடைந்தது.

அதன்போது அங்கு சென்ற தனியார் பேருந்து குழுவினர் ஒரு சிலர், அரச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநரை தாக்கியுள்ளனர்.
அரச பேருந்து சாரதி மற்றும் நடத்துநரை தனியார் பேருந்து குழுவினர் தாக்கும் காட்சி வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக்காலமாக அரச பேருந்து மற்றும் தனியார் பேருந்துக்களிடையே தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.