போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைன் முயற்சிக்கவில்லை: டிரம்ப் குற்றம்
ரஷ்யாவுடனான தற்போதைய மோதலில் உக்ரைன் அதிபருக்கு தொடர்பு இருப்பதாக டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் போர் நெருக்கடிக்கு தீர்வு காண சவுதி அரேபியாவின் ரியாத்தில் அமெரிக்க மற்றும் ரஷ்ய மூத்த அதிகாரிகளுக்கு இடையேயான முதல் சுற்று பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமெரிக்க ஜனாதிபதி இந்த குற்றச்சாட்டை முன்வைத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
போர் நிறுத்த பேச்சு வார்த்தை
இதன் போது கருத்து தெரிவித்த டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர தன்னால் முடியும் என்றும், தற்போது பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் சண்டையை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைனுக்கு 3 ஆண்டுகள் அவகாசம் இருந்ததாகவும், அதற்கான எந்த முயற்சியும் உக்ரைன் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
உக்ரைனில் தேர்தல் நடத்துவது தொடர்பான சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் நிபந்தனைக்கு டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இந்த மாத இறுதியில் ரஷ்ய அதிபரை சந்திக்க ஆவலுடன் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.