நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட முக்கிய குற்றவாளிகள்
நாட்டில் பல குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வந்த இரண்டு குற்றவாளிகள் இன்று (19) பொலிஸ் உத்தரவின் பேரில் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ரவிது சந்தீப குணசேகர மற்றும் அமில சந்திரானந்தா ஆகிய சந்தேக நபர்களே இந்தியாவின் சென்னையிலிருந்து 6E-1175 என்ற இண்டிகோ விமானத்தில் மதியம் 12:50 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள்
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த குணசேகர, என்ற முன்னாள் குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரியான சந்தேக நபர் பிரபல குற்றவாளியான 'ஹரக் கட்டா' என்ற 'நடுன் சிந்தக' என்பரை காவலில் இருந்து தப்பிக்க உதவியதாக குற்றம் சாட்டப்பட்டவர்.
நீர்கொழும்பைச் சேர்ந்த சந்திரானந்தா, பல கொலைகள் மற்றும் பல துப்பாக்கிச் சூட்டு நடவடிக்கைகளுக்காக தேடப்படுபவராவார்.
விமான நிலையத்தில் சந்தேக நபர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின் விசாரணைக்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.