பிரித்தானிய பிரதமராகும் இந்திய வம்சாவளி! யார் இந்த ரிஷி சுனக்?
பிரித்தானியாவின் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சூனக், (Rishi Sunak) கடந்த ஜூலை மாதம் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு அந்தப் பதவிக்கு வர விரும்பினார். ஆனால் அவர் டோரி உறுப்பினர்களின் பெருவாரியான ஆதரவை பெறுவதில் தவறினார்.
அதனால், லிஸ் டிரஸ் (Liz Truss) கடந்த செப்டம்பர் மாதம் டெளனிங் ஸ்ட்ரீட்டில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்குள் பிரதமராக காலடி எடுத்து வைத்தார்.
எனினும், பதவிக்கு வந்த 45 நாட்களிலேயே லிஸ் டிரஸ் பதவி விலகினார். அதைத்தொடர்ந்து போரிஸ் ஜான்சன் இரண்டாவது முறையாக கன்சர்வேடிவ் கட்சிக் குழு தலைவராக ஆவதற்கான தனது முயற்சியை தொடங்கினார்.
இதேபோல, களத்தில் இருந்த பென்னி மோர்டான்ட் தலைமை பதவிக்கான போட்டியில் வேட்பு மனுக்களை திரும்பப் பெறும் கடைசி நேரத்துக்கு முன்பாக போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த தலைவர்களுடன் போட்டிக்களத்தில் நின்ற ரிஷி சுனக், கன்சர்வேடிவ் தலைவராக போட்டியின்றி தேர்வானார்.
ரிஷி சுனக் யார்?
கடந்த கோடை காலத்தில் பிரதமர் பதவிக்கான போட்டியில் முதலாவது முறையாக களம் கண்ட ரிஷி சுனக் முதன்மையாக ஒரு பிரச்னையில் கவனம் செலுத்தினார்.
பிரித்தானியாவின் மோசம் அடைந்து வரும் பொருளாதாரம் - அதை சீர்படுத்துவதற்கு தீர்வு என்பதே அந்தத் திட்டம். அந்த போட்டியின் போது சுனக் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் பேசுகையில், "பொய்யான வாக்குறுதியில் வெற்றி பெறுவதை விட" டோரி தலைமைப் போட்டியில் தோல்வியடைவேன் என்று கூறியிருந்தார்.
அந்த நேரத்தில் லிஸ் டிரஸ் வரிக் குறைப்பு அறிவிப்புகளை வாக்குறுதிகளாக வழங்கினார். அதற்கான எதிர்வினையாக ரிஷி சுனக்கின் கருத்து தோன்றியது, அந்த நேரத்தில் சுனக்கை "பயமுறுத்தக்கூடியவர்" என்று லிஸ் டிரஸ் குற்றம்சாட்டினார்.
ஆனால் லிஸ் டிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, நிதிச் சந்தைகளை ஸ்திரப்படுத்தும் முயற்சியில் கிட்டத்தட்ட அனைத்து முன்மொழியப்பட்ட வரிக் குறைப்புகளும் திரும்பப் பெறப்பட்டன.
இருந்தபோதும், சமீபத்திய கொந்தளிப்பு குறித்து கருத்து தெரிவிக்காத சுனக், "ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியை" சரிசெய்வதற்கும் தனது கட்சியை ஒன்றிணைப்பதற்கும் தான் நான் பிரதமர் பதவிக்கான போட்டியில் களம் நிற்கிறேன்" என்றார்.
இதைத்தொடர்ந்து தற்போதைய நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட் ரிஷி சுனக்கை ஆதரித்தார், "எங்கள் நீண்ட கால வளத்துக்கான தேர்வை ரிஷி சுனக் செய்வார்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
2020ஆம் ஆண்டு பெப்ரவரியில் ரிஷி சுனக் நிதியமைச்சர் ஆனார். அதற்கு சில நாட்களிலேயே பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு தீவிரம் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.
அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்த வேண்டிய முக்கிய பொறுப்பு ரிஷி சுனக் வசம் வந்தது. மில்லினியல் ஆண்டில் பிறந்த, எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவராக அறியப்படும் ரிஷி சுனக், முதலாவது பொது முடக்க காலத்தில் தனது 40வது பிறந்தநாளை எதிர்கொண்டிருந்தார்.
ரிஷி சுனக் எதிர்கொண்ட சவால்கள் :
2020ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் ஆபத்தில் உள்ள மக்களுக்கு உதவ "எதை வேண்டுமானாலும்" செய்வதாக அவர் உறுதியளித்தார்.
மேலும் £350 பில்லியன் மதிப்புள்ள திட்டத்தை அவர் வெளியிட்டார். அவரது தனிப்பட்ட கருத்துக்கணிப்பு மதிப்பீடுகள் பரவலான கவனத்தை ஈர்த்தன. ஆனால் பிரித்தானிய தொடர்ந்து மோசமான பொருளாதார நிலையால் பாதிக்கப்பட்டு வந்தது.
மேலும் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் டெளனிங் ஸ்ட்ரீட்டில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் கொரோனா பொதுமுடக்க விதிகளை மீறியதற்காக காவல்துறையினரால் அபராதம் விதிக்கப்பட்ட நடவடிக்கையை ரிஷி சுனக் சமாளிக்க வேண்டி இருந்தது.
கடந்த ஏப்ரலில் சில பழமைவாத விமர்சகர்கள், போராடும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவு அழுத்தத்தின் அளவை கோடீஸ்வர அமைச்சர் புரிந்து கொண்டாரா என்று கேள்வி எழுப்பினர்.
அந்த மாதத்தில், ரிஷி சுனக் மற்றும் அவரது குடும்பத்தினரின் நிதிகள் தீவிர ஆய்வுக்கு உட்பட்டன, அவருடைய மனைவி அக்ஷதா மூர்த்தியின் வரி விவகாரங்கள் சர்ச்சை ஆக்கப்பட்டன.
பின்னர் அவர் தனது கணவர் மீதான அரசியல் அழுத்தத்தைத் தணிக்க, தமது வெளிநாட்டு வருமானத்திற்கு உள்நாட்டு வரியை செலுத்தத் தொடங்குவதாக அறிவித்தார். தொழிலாளர் கட்சி இந்த நிதி முறைகள் குறித்து பல கேள்விகளை முன்வைத்தது.
2020ஆம் ஆண்டில் பிரித்தானிய விர்ஜின் தீவுகள் மற்றும் கேமன் தீவுகளில் உள்ள வரி புகலிட அறக்கட்டளைகளின் பயனாளியாக அவர் பட்டியலிடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் ரிஷி சுனக்குக்கு தொடர்பு இருப்பதாக இன்டிபென்டன்ட் நாளிதழ் கூறியது. அந்த தகவல்களை ஏற்கப்போவதில்லை என்று ரிஷி சுனக்கின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
ரிஷி சுனக்கின் அரசியல் பயணம்
2015 முதல் அவர் யார்க்ஷயரில் உள்ள ரிச்மண்டின் கன்சர்வேடிவ் எம்.பி.யாக இருந்து வருகிறார், மேலும் தெரீசா மே அரசாங்கத்தில் இளைய அமைச்சராக இருந்தார்.
தெரீசா மேவுக்குப் பிறகு பிரதமரான போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் ரிஷி சுனக், நிதியமைச்சராக இருந்தார். 2020ஆம் ஆண்டு பெப்ரவரியில் நிதியமைச்சராக பதவி உயர்வு பெற்ற ரிஷி, போரிஸ் ஜான்சனின் தீவிர ஆதரவாளராக இருந்தார்,
ஆனால் பொருளாதார சீர்படுத்தும் நடவடிக்கையில் தமது சொந்த அணுகுமுறையை நம்பிய அவர், பிரதமரின் அணுகுமுறைக்கும் தமது அணுகுமுறைக்கும் இடையிலான "அடிப்படை" வேறானது என்று கூறி தமது பதவியை ராஜினாமா செய்தார்.
போரிஸ் ஜான்சன் பதவி விலகிய பிறகு நடந்த பிரதமர் பதவிக்கான போட்டியில் டோரி தலைமைப் பிரசாரத்தின் போது அவரது பிரெக்சிட் சொல்லாட்சி வெளிப்பட்டது, ஆனால் இந்த முறை அது ரிஷி சுனக்கிற்கு எதிராகத் திரும்பியது.
தனது வரிக் குறைப்புத் திட்டத்தின் விளைவுகள் குறித்து கவலை தெரிவித்ததற்காக, சுனக்கை "பயமுறுத்தும் போக்கு கொண்டவர்" என்று லிஸ் டிரஸ் குற்றம்சாட்டினார்.
ரிஷி சுனக் பட மூலாதாரம், பிரதமராக போரிஸ் ஜான்சன் இருந்தபோது அவருடன் ஏற்பட்ட மோதலில் நிதியமைச்சர் பதவியில் இருந்து சாஜித் ஜாவித் விலகினார். அதன் பிறகு அப்பதவிக்கு வந்தவர் ரிஷி சுனக். தெரீசா மேயின் பிரெக்சிட் ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மூன்று முறையும் ரிஷி அதற்கு ஆதரவாக வாக்களித்தார்.
போரிஸ் ஜான்சனின் ஆதரவுடன் 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் உள்ளூர் அரசாங்க அமைச்சராக இருந்த அவர் நிதித்துறை அமைச்சராக பதவி உயர்வு பெற்றார். 2020ஆம் ஆண்டு பெப்ரவரியில் சாஜித் ஜாவித், பிரதமருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
அதன் பிறகு அந்த பதவிக்கு வந்தார் ரிஷி சுனக். இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் தமது பதவியை ராஜினாமா செய்தார். அந்த நடவடிக்கை டோரி தலைவர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்த போரிஸ் ஜான்சனின் வீழ்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தது.
தலைமைத்துவக் கூட்டத்தில், ஜான்சனுக்கு விசுவாசமாக இருப்பதாக சுனக் வலியுறுத்தினார். ஆனால் அவரது அரசாங்கம் தீவிரமான நெறிமுறை கேள்விகளின் "தவறான பக்கத்தில்" இருந்ததால் ராஜினாமா செய்ததாக சூனக் அறிவித்தார்.